அமரவிருட்சம்
270 ஆண்டுக்கு முன்-தோன்றிய
பெர்மின் தேசத்தவரே!
இன்றும் இத்தேசத்தில்
காத்திருபது யாருக்காக?
எமன் உண்னை அழைத்துசெல்ல,
அணுகுண்டு வடிவில் வந்தும்,
உன் புன்முறுவலால்,
நலம் விசாரித்தாயே!
அவன் வந்ததடம் மறையுமுன்னே,
மறுபிறவி எடுத்துவிட்டாய்!
உன்னை கடவுள் எனவணங்கும்,
இம்மானுடர்களுக்கு,
மௌனமாய் வரமளிக்கிறாயா?
உன்னில் உள்ள அமிர்தத்தை,
எங்களுக்கும் பரிசளியேன்?
அன்பை பிரதிபலிக்கும்,
உந்தன் இலைகள்,
நிறம் மாறிமாறியே,
இங்கு பல இதயங்களை
கவர்ந்துவிட்டாய்!
இன்னும் நீ யார் என அறிய,
என் மனம் துடிக்கிறதே,
என்காதல் ஜின்கோ பைலோபா!
Reference
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக